TamilsGuide

2 ஆம், 3ஆம் தெரிவு குறித்து சிந்திக்க வேண்டாம் -அநுர

ஜனாதிபதித் தேர்தலில் தங்களின் வெற்றி உறுதியாகிவிட்டதாகவும், இந்த வெற்றியின் பின்னர் எந்தவொரு நபரும் வன்முறைச் சம்பவங்களின் ஈடுபடக்கூடாது என்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான அநுரகுமார திஸாநாயக்க வலியுறுத்தினார்.

இன்று பிற்பகல் களுத்துறையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எதிர்காலம் குறித்த கனவவை நிறைவேற்றிக் கொள்ளவதற்காக தேசிய மக்கள் சக்தியுடன் இலட்சக்கணக்கான மக்கள் இன்று இணைந்துள்ளனர்.

செப்டெம்பர் 21 ஆம் திகதி எங்களுடைய நாட்டின் பாரிய நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொள்வதற்கான முதல் கட்ட நடவடிக்கை நிறைவேற்றப்படும். ஆரம்பத்திலேயே நாங்கள் ஒரு மாற்றத்தை காட்ட வேண்டும்.

நீங்கள் அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று திசைக்காட்டி முன்பாக புள்ளிடியிடுங்கள். இரண்டாம், மூன்றாம் தெரிவு குறித்து எதனையும் சிந்திக்க வேண்டாம்.

பெயர் உள்ளது. சின்னமுள்ளது. அதற்கு முன் புள்ளடியிடுங்கள் போதும். தேர்தல் முடிவுகள் வெளிவரும் போது நாங்கள் வெற்றிபெற்றிருப்போம். தேர்தல் வெற்றிக்கு பின்னர் நாங்கள் எந்தவொரு வன்முறைகள், ஏனைய தரப்பினர், கட்சியினர் மற்றும் பணிபுரியும் எந்தவொருவருக்கும் தெரியாமலும் பாதிப்பு ஏற்படும் வகையில் செயற்பட வேண்டாம்.

நாங்கள் நாட்டின் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் மேடைகளில் மாற்றமடையுமாறு வலியுறுத்தினாலும், ஏனைய கட்சிகளுக்காக பணியாற்றும் உரிமை, வாக்களிக்கும் உரிமையை மதிக்கிக்கின்றோம்.

அது ஜனநாயக உரிமையாகும். ஆகவே, எங்களுடைய வெற்றிக்கு பின்னர் வரலாற்றில் இடம்பெற்றது போன்று தாக்குதல், துப்பாக்கிச்சூடு, பஸ்களை எரித்தல், ஏனையோரை கொலை செய்வதாக மிரட்டுதல், பணிபுரியும் இடங்களில் இருப்போரை இடமாற்றம் செய்வதாக மிரட்டுவது போன்ற எந்தவொரு செயற்பாட்டையும் முன்னெடுக்கக் கூடாது.

வாக்களிக்கும் வரை நாம் பொறுமையாக இருப்பது போன்று, வெற்றிக்கு பின்னரும் பொறுமையாக இருந்து அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டிய தேவையுள்ளது.
ஆகவே, எதிர்தரப்பினர் திட்டமிட்ட வகையில் வன்முறைகளில் ஈடுபட முயற்சித்தாலும் நீங்கள் யாரும் அதில் எவ்விதத்திலும் தலையிட வேண்டாம்.

பொலிஸ் மற்றும் முப்படையினரின் அதிகாரத்துக்கு உட்பட்டு நாட்டில் இடம்பெறும் வன்முறைகளை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாம் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
 

Leave a comment

Comment