TamilsGuide

எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது -சஜித் பிரேமாச

“எங்களுடைய வெற்றி உறுதியாகிவிட்டது. ஆகவே, அச்சமின்றி நாட்டை என்னிடம் ஒப்படையுங்கள்” என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேம தாச சூளுரைத்துள்ளார்.

மருதானை டவர் மண்டபத்துக்கு முன்பாக நேற்றைய தினம் இடம்பெற்ற  இறுதித் தேர்தல் பிரசாரக் கூட்த்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது”  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 20 இலட்சம் வாக்குகளில் நாம் வெற்றிபெறுவோம். எமது வெற்றி உறுதி. இந்த வெற்றி மூலம் முதலில் நாம் எம்மை வெற்றி பெற்றவர்களை கௌரவிக்க கடமைப்பட்டுள்ளோம். சகோரத்துவம், ஒற்றுமை, நட்புறவுடன் எமது தாய் நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

சஜித்தை தோற்கடிக்க ரணில், அநுர என்போர் ஒரு பக்கத்தில் உள்ளனர். இந்த நாட்டில் சகல பிரச்சினைகளையும் உருவாக்கியவர் இன்று சகல பிரச்சினைகளும் சாதாரண நிலைக்கு வந்துவிட்டது என்கிறார். எது இன்று சாதாரணமானது?

வாழ்வாதாரம், வாழ்க்கைக் தரம் என்பன வீழ்ச்சியடைந்து தான் உள்ளன. ரணிலின் ஆட்சியில் நன்றாக ஊழல், மோசடிகள் உயர்வடைந்துள்ளன. ரணிலுக்கு வாக்களித்து வாக்கை நாசமாக்குபவர்கள் இருப்பார்களாயின், அவற்றை வீணாக்காதீர்கள். ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றிபெற செய்யுங்கள்.

ஐக்கிய மக்கள் சக்தியில் கல்விமான்கள் அதிகமானவர்கள் உள்ளனர். உயர்நீதிமன்றம் வரை சென்று நாட்டை நாசமாக்கியவர்களை அடிப்படை உரிமை மீறல்கள் வழக்கு தொடரப்பட்டு நீதி பெற்றுகொடுத்த ஒரு கட்சி எமது கட்சியாகும்.

இந்த நாட்டில் துன்பமைடைந்துள்ள சகலருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி நிவாரணமளிக்கும் என்பதுடன், எமது நாட்டு மக்களுக்காக நிவாரணம் வழங்கப்படும், நாட்டின் சொத்துக்கள் பேணப்படும் என்பது உறுதி.

ராஜபக்கள் பாதுகாத்த குழு தான் ரணிலின் குழுவினர். இரு குழுக்களும் ஒன்று தான். என்னிடம் கூறினார்கள் நான் பொறுப்புக்களை ஏற்கவில்லை என்று. எனக்கு ரணில் மாதிரி நாடாளுமன்றத்தில் ராஜபக்ஷக்களின் பெரும்பானமை எனக்கு இருக்கவில்லை.

பொதுமக்களின் ஆட்சியே உருவாக்கப்படும் என்பதை உறுதியளிக்கிறேன். எமது ஆட்சி ஊடாக பொறுப்புக்களை ஏற்பது 365 நாட்களும் 24 மணித்தியாலமும் இடம்பெறும். பொதுமக்களுக்கு நீதியாக நியாயம் பெற்றுக்கொடுக்கப்படும்.

எந்தவொரு திருட்டுக்களும் இடம்பெறாது. டிஜிட்டல் ப்ளிக் பிளட்வோம் வழியாக நாம் புது வழிகளில் தீர்வுகளை வழங்குவோம். அனைவருக்கும் அதனை அறிமுகப்படுத்துவோம்.

அச்சமின்றி நாட்டை சஜித் பிரேமதாசவிடம் நாட்டை ஒப்படையுங்கள் என இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன். இந்த நாட்டிலுள்ள 25 மாவட்டங்களில் வாழும் அனைத்து மக்களையும் இன, மத பேதமின்றி வாழ்வதற்கான சூழலை உருவாக்குவோம்” இவ்வாறு சஜித் பிரேம தாச தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment