TamilsGuide

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும்-பிரதிப் பொலிஸ் மா அதிபர்

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நேர்ந்தால், ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்

ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானிக்க முடியும் என்றும் பொலிஸாருக்கோ பாதுகாப்பு பிரிவினருக்கோ அதுதொடர்பில் தீர்மானம் எடுக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதிலும் 63,000ற்கும் மேற்பட்ட காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment