TamilsGuide

கனடாவில் வீடு கொள்வனவு செய்வோருக்கான சலுகை

கனடாவில் அடகு கடன் தொடர்பான சட்டங்களில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் மத்திய அரசாங்கம் இது தொடர்பான சட்ட திருத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடு கொள்வனவு செய்வதனை இலகுவாக்கும் வகையில் இந்த புதிய சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

எனவே எதிர்வரும் காலங்களில் புதிய சட்டத்தின் பிரகாரம் வீடு ஒன்றை கொள்வனவு செய்வதற்கு அடிப்படை கட்டணமாக மொத்த பெறுமதியில் 20 வீதத்தை செலுத்த தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒன்று முதல் ஒன்று தசம் ஐந்து மில்லியன் டாலர்கள் பெறுமதியான வீடு ஒன்றை கொள்வனவு செய்யும் போது இவ்வாறு 20 வீதமான அடிப்படைத் தொகையை செலுத்த தேவையில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாற்றமானது வீடுகளை கொள்வனவு செய்வோரை ஊக்குவிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

முதல் தடவையாக வீடு கொள்வனவு செய்பவருக்கு 30 ஆண்டுகள் வரையில் அடகு கடன் தவணை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்டங்கள் எதிர்வரும் டிசம்பர் மாதம் நடுப்பகுதி முதல் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சட்ட திருத்தங்கள் வீடு கொள்வனவு செய்பவருக்கு பெரும் வசதியாக அமையும் என பிரதி பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களுக்கு இந்த புதிய சட்ட திருத்தம் உதவியாக அமையும் என அவர் தெரிவித்துள்ளார். 

Leave a comment

Comment