TamilsGuide

வெடித்துச் சிதறிய வாக்கி டாக்கிகள் - லெபனானில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின.

இதில் 9 பேர் உயிரிழந்தனர். 3000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு இஸ்ரேலே காரணம் என ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது.

இதற்கிடையே, லெபனான் தெற்கு பகுதிகளிலும், தலைநகர் பெய்ரூட்டின் பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லாவினரின் வாக்கி டாக்கி கருவிகள் நேற்று ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் 3 பேர் உயிரிழந்தனர், 15 பேர் காயம் அடைந்தனர் என முதல் கட்ட தகவல் வெளியானது.

இந்நிலையில், வாக்கி டாக்கிகள் வெடித்ததில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. 300-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர் என ஹிஸ்புல்லா அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், வீடுகளில் இருந்த சோலார் பேனல்கள் உள்பட சில மின் சாதனங்களும் வெடித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் இஸ்ரேலின் சதி இருப்பதாக ஹிஸ்புல்லா குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான மோதல் மேலும் தீவிரமடையும் என தெரிகிறது.
 

Leave a comment

Comment