• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும் -சஜித் பிரேமதாச

இலங்கை

”ஐக்கிய மக்கள் கூட்டணியின் புதிய ஆட்சியில் பெண்கள், மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பான மாற்றங்களை அரசியல் அமைப்பின் ஊடக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என ஜக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஐக்கிய பெண்கள் சக்தி கொள்கை திட்டம் தொடர்பான ஆவணங்கள்  வெளியிட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  சஜித் பிரேமதாச இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”எமது ஆட்சியில் பெண்களுக்கான புதிய திட்டங்கள் நடைமுறைக்கு வரும். புதிய அரசியல் அமைப்பில் மகளிர் உரிமை, சிறுவர் உரிமை தொடர்பான சீர்திருத்தங்களை மேற்கொள்ளப்படும்.

எமது ஆட்சியில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் கௌரவம், அந்தஸ்து, பாதுகாப்பு உறுதிப்படுத்தப் படுவத்துடன்
அது தொடர்பான புதிய சட்டங்களையும் உருவாக்கவுள்ளோம். பெண்கள் பாதுகாப்பு நம்பகத் தன்மையினை உறுதிப்படுத்துவதற்காக ஜனாதிபதி செயலனி ஸ்தாபிக்கப்படும்.

மக்களால் தெரிவு செய்யப்படும் ஜனாதிபதியின் பூரண கண்காணிப்பில் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். எமது ஆட்சியில் வறுமை ஒழிப்பு திட்டதில் பெண்களுக்கு முதல் இடம் வழங்கப்படும். சுயத்தொழில் சார்ந்த புதிய வேலை திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்.

24 மாதகால திட்டம் ஒன்று நடைமுறை படுத்தப்படும். உற்பத்தி முதலீடு, சேமிப்பு, ஏற்றுமதி போன்றவை இதனூடக மேற்கொள்ளமுடியும். பெண்கள் மீதான துஸ்பிரயோகம்  மற்றும் வன்முறைகள் நாட்டில் அதிகரித்து வருகின்றன. பெண்களின் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படும்” இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply