TamilsGuide

துப்பாக்கிச்சூடு - டொனால்டு டிரம்ப்- ஜோ பைடன் சொன்னது என்ன?

குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் உடன் நேரடி விவாதத்தில் ஈடுட்ட நிலையில், புளோரிடாவில் உள்ள கோல்ப் பிளபபில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது கோல்ப் கிளப் அருகே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது.

இதையடுத்து அதிகாரிகள் டிரம்பை பாதுகாப்பாக அங்கிருந்து அனுப்பி வைத்தனர். முன்னதாக பிரசாரத்தின்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், தற்போது 2-வது முறையாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த தாக்குதல் தொடர்பாக டொனால்டு டிரம்ப் கூறுகையில் "நான் பாதுகாப்பாக இருக்கிறேன். நலமாக இருக்கிறேன். எதுவும் என் வேகத்தை கட்டுப்படுத்தாது. ஒருபோதும் நான் சரண் அடையமாட்டேன். நீங்கள் எனக்கு ஆதரவு அளிப்பதை எப்போதும் விரும்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், "அமெரிக்காவில் அரசியல் வன்முறை அல்லது எந்தவொரு வன்முறைக்கும் எப்போதும் இடமில்லை" இடமில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சந்தேகப்படும் ரியான் வெஸ்லி ரவுத் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

Leave a comment

Comment