• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்காக பிரான்ஸ் தேர்ந்தெடுத்துள்ள இந்தியப் பெண் இயக்குநரின் திரைப்படம்

பிரான்ஸ் ஆஸ்கர் கமிட்டி, சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்காக இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுத்துள்ள திரைப்படங்களில், இந்தியப் பெண் இயக்குநர் ஒருவர் இயக்கிய திரைப்படம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

பிரான்ஸ் ஆஸ்கர் கமிட்டி, சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்காக இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுத்துள்ள திரைப்படங்களில் ஒன்று, All We Imagine as Light என்னும் திரைப்படமாகும்.

இந்திய இயக்குநரான பாயல் கப்பாடியா என்னும் பெண் இந்த திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

77ஆவது Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட All We Imagine as Light என்னும் திரைப்படம், இந்தியாவிலிருந்து போட்டியில் பங்கேற்ற ஒரே திரைப்படமாகும்.

அத்துடன் அந்தப் படம் Grand Prix விருதையும் வென்றது.

மும்பையில் வாழும் இரண்டு செவிலியர்களைக் குறித்த திரைப்படமாகும் All We Imagine as Light என்னும் திரைப்படம்.

இந்த திரைப்படத்தில் Kani Kusruti, Divya Prabha, Chhaya Kadam, Hridhu Haroon, Azees Nedumangad மற்றும் Tintumol Joseph ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சரி, இந்த படத்துக்கும் பிரான்சுக்கும் என்ன சம்பந்தம்?

அதாவது, All We Imagine as Light திரைப்படத்தை, பிரான்ஸ் தயாரிப்பாளர்களான Thomas Hakim மற்றும் Julian Graff ஆகியோர் தயாரித்துள்ளார்கள்.

அவர்களுடைய Petit Chaos என்னும் தயாரிப்பு நிறுவனம், இந்திய தயாரிப்பு நிறுவனங்களான Chalk & Cheese Films மற்றும் Another Birth, நெதர்லாந்து தயாரிப்பு நிறுவனமான BALDR Film,லக்ஸம்பர்கின் Luxembourg Les Films Fauves, இத்தாலியின் Pulpa Films மற்றும் பிரான்சின் Arte France Cinéma ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது.
 

Leave a Reply