TamilsGuide

கல்முனையில் அரியவகை உயிரினம் கண்டுபிடிப்பு

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகரில்  நன்னீர் நாய் எனக் கருதப்படும் அரியவகை  உயிரினமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

லெட்ரொகலே இனத்தைச் சேர்ந்த குறித்த நன்னீர் நாயானது கடந்த சனிக்கிழமை கல்முனை மாநகரில் உள்ள தனியார் வாகன திருத்தும் இடத்திற்கு வழி தவறி சென்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது எனவும், அதன்பின்னர்  வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நன்னீர் நாய்கள் இந்திய துணைக்கண்டத்திலும் தென்கிழக்காசியப்பகுதிகளிலும் காணப்படுவதாகவும், அவை மற்ற நீர் நாய்களைவிட முடிகள் குறைவாகவும் மிருதுவாகவும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆற்றில் நீந்தி மீன்களை பிடிக்க ஏதுவாக இவற்றின்  கால்களில் வாத்துகளுக்கு காணப்படுவது போல்   விரலிடைத் தோல் மற்றும் பட்டையான நீண்ட வால் என்பன காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Leave a comment

Comment