• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புற்றுநோயிலிருந்து தப்பியவர்... சொந்தமாக 10 விமானங்கள் - சவால்களை சாதனையாக்கிய கனிகா தெக்ரிவால்

இந்தியாவில் விமானத் தொழிலில் ஈடுபடுபவர்களையே மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்து, செல்வாக்கு மிகுந்த தொழிலதிபராக உயர்ந்துள்ளார் கனிகா தெக்ரிவால்.

இனி போராட வலுவில்லை என்று தொழில் துறையில் இருந்து மொத்தமாக வெளியேறியவர் கனிகா. ஆனால் தாம் எதிர்கொண்ட சவால்களை பொறுமையாக ஏற்றுக்கொண்டு, புற்றுநோயின் பிடியில் இருந்தும் மீண்டு வந்த கனிகா JetSetGo என்ற நிறுவனத்தை நிறுவினார்.

விமானங்களை வாடகைக்கு வழங்கும் இந்தியாவின் முதல் நிறுவனம் JetSetGo. 1990ல் பிறந்த கனிகா, இளம் வயதிலேயே பெரும் சவால்களை எதிர்கொள்ள நேர்ந்தது.

பெற்றோரின் எதிர்ப்பு முதல் சர்வ சாதாரணமாக பாலியல் துன்புறுத்தல் வரையில் கனிகா எதிர்கொண்டார். அத்துடன், இளம் வயதில் புற்றுநோய் பாதிப்பு. ஆனால் மொத்த சவால்களையும் அவர் எதிர்கொண்டார்.

2012ல் JetSetGo என்ற நிறுவனத்தை துணிச்சலுடன் துவங்கினார். தற்போது சுமார் 420 கோடி சொத்து மதிப்புடன் அவர் நிறுவனத்தில் 10 விமானங்களும் உள்ளன.

JetSetGo நிறுவனம் 6,000 பயணங்களை நிறைவு செய்துள்ளதுடன் சுமார் 100,000 பயணிகளுக்கு சேவை வழங்கியுள்ளது. Sky Queen என பரவலாக அறியப்படும் கனிகா தொழில் துறையில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply