• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வட்டியில்லாக் கல்விக்கடன் - மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

இலங்கை

வட்டியில்லாக் கல்விக்கடன் திட்டத்தின் கீழ் இவ்வருடம் ஏழாயிரம் மாணவர்களுக்கு கடன் வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆண்டு அதிகபட்சமாக பதினைந்து லட்சம் ரூபாய் வரை ஐந்து பிரிவுகளின் கீழ் கடன் பெறலாம் என்றும் பதினெட்டு உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply