• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வெறும் 300 ரூபாயுடன் ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய பெண் - இன்று பல கோடிகளுக்கு அதிபதி

குடும்ப சூழல் காரணமாக 15 வயதில் வெறும் 300 ரூபாய் பணத்துடன் வீட்டைவிட்டு வெளியேறியவர் இன்று பல கோடி மதிப்பிலான நிறுவனத்திற்கு உரிமையாளர்.

மராட்டிய மாநிலத்தில் மும்பை நகரத்தை சேர்ந்தவர் சினு கலா. குடும்ப சூழல் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியவரிடம் அப்போது வெறும் 300 ரூபாய் பணமும் ஒரு பையில் உடைகளும் மட்டுமே இருந்துள்ளது.

கடும் சவால்களை எதிர்கொண்ட சினு கலா, மும்பை ரயில் நிலையத்தில் இரண்டு நாட்கள் இரவு படுத்துறங்கும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் தனது விடாமுயற்சியால் தற்போது உயரங்களை அவர் தொட்டுள்ளார்.

2014ல் பெங்களூருவில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் Rubans Accessories என்ற குட்டி கடை ஒன்றை திறந்துள்ளார். அதன் பின்னர் ஒரு மில்லியனுக்கும் அதிகமான நகைகள் விற்கப்பட்டுள்ளன.

10ம் வகுப்பு முடித்து, பொருளாதார நெருக்கடி காரணமாக வீடு தோறும் கத்தி உள்ளிட்ட பொருட்களை விற்கும் பணியில் சினு ஈடுபட்டுள்ளார். நாள் ஒன்றிற்கு 20 ரூபாய் சம்பளமாக வாங்கியுள்ளார்.

2007ல் திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டியில் கலந்துகொண்டு 10 பேர்களில் ஒருவராக தெரிவானார். 2004ல் அமித் என்பவரை திருமணம் செய்துகொண்ட சினு கலா, பின்னர் மொடல் துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

பொருளாதார ரீதியாக முன்னேறினாலும், நீண்ட காலத்திற்கு அந்த தொழில் கைகொடுக்காது என்பதை அவர் புரிந்து கொண்டார். 2014ல் ரூ 3 லட்சம் முதலீட்டில் Rubans Accessories என்ற குட்டி கடை ஒன்றை திறந்துள்ளார்.

2018ல் பெங்களூரு மட்டுமின்றி, ஐதராபாத் மற்றும் கொச்சியிலும் சேர்த்து 5 கடைகளை திறந்துள்ளார். கோவிட் நெருக்கடியின் போது இணையமூடாக விற்பனை செய்யும் முயற்சியை முன்னெடுக்க, அது அவருக்கு சாதகமாக அமைந்தது.

தற்போது Rubans Accessories நிறுவனத்தின் மதிப்பு என்பது ரூ 104 கோடி என்றே கூறப்படுகிறது.
 

Leave a Reply