• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ட்ரெண்டிங்கில் கோட் ஏஐ போஸ்டர் - ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை வெளியிட்ட படக்குழு

சினிமா

விஜய் மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகியுள்ள தி கோட் (தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்) திரைப்படம் நாளை (செப்டம்பர் 5) வெளியாகவுள்ளது.

நடிகர் விஜயுடன் பைக்கில் அமர்ந்திருப்பதுபோல எடிட் செய்து தரும் AI இணையதளத்தை தி கோட் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிமுகம் செய்தது.

agsentertainment.heyareweare.com இணையதளத்தில் தங்கள் புகைப்படத்தை பதிவேற்றி, விஜய்யுடன் இருப்பதுபோன்ற புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

தி கோட் திரைப்படம் நாளை வெளியாவதை ஒட்டி, இன்று மாலை 6 மணிக்கு ரிலீஸ் ப்ரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply