• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜே.வி.பி பழைய நிலையில் இருந்து இன்னும் மாறவில்லை – எஸ்.பி.திசாநாயக்க

இலங்கை

ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜே.வி.பி நடித்தாலும் இன்னும் பழைய போக்குடனே உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தொிவித்துள்ளாா்.

பெல்மடுல்ல வாராந்த சந்தை வளாகத்தில் நடைபெற்ற ‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவா் இதனைத் தொிவித்தாா். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”ஜனநாயக வழிக்கு வருவதாக அறிவித்த ஜே.வி.பி 1988 தேர்தலின் போது தேர்தலில் போட்டியிடுவது மரண தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்தது.

தேர்தல் கடமை மேற்கொண்டால் அதற்கான தண்டனை, மரணம் என மாவட்ட செயலாளர்கள் எச்சரித்தது.

மற்றும் வாக்களிப்போருக்கு மரணம் பரிசளிக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கும் அறிவிக்கப்பட்டது.

அன்று ஜே.வி.பியின் வன்முறைக்கு முகங்கொடுத்தவர் ரணில் விக்ரமசிங்க. சட்டம் ஒழுங்கை பேண முக்கிய பங்காற்றினார் ரணில் விக்ரமசிங்க.

1000 இற்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து விலகிச் சென்றுள்ளனர்.

ஜே.வி.பிக்கு எதிராக பல்கலைக்கழக தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த மாணவர்கள் துரத்தித் துரத்தி அடிக்கப்பட்டனர்.

இன்றும் அந்த நிலைமை காணப்படுகிறது. ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்து விட்டதாக நல்லவர்கள் போல ஜேவிபி நடித்தாலும்
இன்னும் பழைய போக்குடனே உள்ளது” என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply