• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரணிலின் பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியாது

இலங்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தோல்வியை உணர்ந்த நிலையிலேயே அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு என்ற பொய்யான வாக்குறுதியை கையில் எடுத்துள்ளதாக தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

எல்பிட்டியவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தோல்வியை தற்போது உணர்ந்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு, பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்தல் போன்ற நடைமுறைச் சாத்தியமற்ற உறுதிமொழிகளை வழங்க ஆரம்பித்துள்ளார்.

நாட்டின் மீதும், நாட்டு மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டிருந்தால்,
தற்போது வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை கடந்த காலத்திலேயெ நிறைவேற்றியிருக்க முடியும்.

ஆட்சியை இழக்கப் போவதை உணர்ந்தே, தேர்தல் வாக்குறுதிகளை கொடுக்க ரணில் ஆரம்பித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு கேட்டபோது, பணப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி மறுத்துவிட்டார்.

இப்போது எப்படி சம்பளத்தை உயர்த்துவார். அவர் விவசாய கடன்களை தள்ளுபடி செய்வேன் என்றும் கூறியது பொய். அது சாத்தியம்தான். ஆனால், முதலில் ஒரு முறையான பகுப்பாய்வு செய்யப்பட வேண்டும், அவர் இப்போது தோல்வி பயத்தால் நடைமுறைக்கு மாறான மற்றும் குழப்பமான வாக்குறுதிகளை வழங்குகிறார்.

ஒவ்வொரு தேர்தலின் போதும் இதுபோன்ற வாக்குறுதிகளை மக்கள் கேட்டு வருவதால் இதுபோன்ற பொய்யான வாக்குறுதிகளால் மக்களை ஏமாற்ற முடியாது.

தோல்விப்  பயத்தால் நடைமுறைக்கு மாறான மற்றும் குழப்பமான வாக்குறுதிகளை வழங்குகிறார்” இவ்வாறு அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply