• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வடக்கு கிழக்கை எவரும் கண்டுகொள்ளவில்லை – சஜித்

இலங்கை

யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அபிவிருத்திக்காக நிலையான வேலைத்திட்டங்களை எதனையும் கடந்த கால ஜனாதிபதிகள் மேற்கொள்ளவில்லை என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மன்னாரில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடா்பாக அவா் மேலும் தொிவிக்கையில்,

”சர்வதேச முதலீடுகளுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் 9 மாகாணங்களையும் அபிவிருத்தியடையச் செய்யும் நிலையான வேலைத்திட்டங்கள் ஐக்கிய மக்கள் கூட்டணியின் அரசாங்கத்தில் மேற்கொள்ளப்படும்.

அதே போன்று சுற்றுலாத்துறை ரீதியாகவும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தும் மன்னார் மாவட்டத்தை அபிவிருத்தியடையச் செய்வதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படும்.

அத்துடன் எமது கொள்கைகளுக்கு அமைய, உயர் தரமுடைய உர மூடை விவசாயிகளுக்கு 5,000 ரூபாவுக்கு வழங்கப்படும்.
நெல்லுக்கான நிரந்தர விலை நிர்ணயிக்கப்படும்.

அதே போன்று விவசாயக் கடன் முழுமையாக இரத்து செய்யப்படும். அத்துடன் கடற்றொழிலாளர்கள், விவசாயிகள், முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்தில் ஈடுபடும் வாகன சாரதிகளுக்கு கியூ.ஆர். முறைமையின் கீழ் எரிபொருள் மானியம் வழங்கப்படும்” என சஜித் பிரேமதாச மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply