• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டெவோன் கால்வாயில் கவிழ்ந்து லொறி விபத்து

இலங்கை

தலவாக்கலையில் இருந்து ஹட்டன் -கொட்டகலை நோக்கி பயணித்த லொறி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து  வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது  நேற்று (02) மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும்,விபத்தில் படுகாயமடைந்த லொறி சாரதி கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் திம்புல்ல பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
 

Leave a Reply