• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது

இலங்கை

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் இன்று வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க, மற்றும் திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச இன்று தனது கொள்கை பிரகடனத்தை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை தமிழ் பொது வேட்பாளரின் கொள்கைப் பிரகடனமும் இன்றையதினம் வெளியிடப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனம் இன்று வெளியீடு

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்சவினால் குறித்த தேர்தல் விஞ்ஞாபனம் கடந்த வெள்ளிக்கிழமை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளதாவது” 2024 ஜனாதிபதி தேர்தலில் நாம் எதிர்வரும் 5 முதல் 10 வருடங்களுக்கு முன்னெடுக்க வேண்டிய வேலைத்திட்டங்களை நாம் வெளியிட்டுள்ளோம்.

நாம் இயலுமானதையே செய்வோம் போலிவாக்குறுதிகளை வழங்கமாட்டோம். நாட்டின் இறைமையை பாதுகாத்து தேசிய பொருளாதாரத்தினை கட்டியெழுப்ப வேண்டியது எமது கடமையாகும். நாம் அரசியல் வரப்பிரசாதங்களுக்காக செயற்படுபவர்கள் அல்ல.

30 வருடகாலத்தினை முடிவுக்கு கொண்டுவந்த அரசாங்கம் கொவிட் பரவலை வெற்றிகரமாக முறியடித்த அரசாங்கம். நாம் இந்த நாட்டை அபிவிருத்தி அடைந்த நாடாக மாற்றுவோம். இந்த நாட்டின் தேசிய உற்பத்தியை 2 மடங்காக அதிகரிப்போம். டிஜிட்டல் முறைமையினுடாக நாட்டின் பலபிரச்சினைகளுக்கு தீர்வு காணமுடியும் நாட்டில் வரிசையுகம் ஏற்படுவதை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவரமுடியும்.

எமது அரசாங்கத்தில் முதல் 6 மாதங்களுக்குள் அரச சேவையினை டிஜிட்டல் மயப்படுத்துவோம். இதனூடாக மக்கள் இலகுவாக அரச சேவைகளை பெற்றுக்கொள்ளமுடியும்.

வரியினை குறைப்போம் அதேபோல் மக்களால் தாங்கிக்கொள்ளக்கூடிய அளவிலேயே வரியினை நடைமுறைப்படுத்துவோம். டிஜிட்டல்மயப்படுத்தலின் ஊடாக ஊழலை 3 வருடங்களுக்குள் முற்றாக ஒழிக்க முடியும். டிஜிட்டல் பொறிமுறையூடாக பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்வோம். 20 லட்சம் பேருக்கு தொழில்வாய்ப்பு வழங்குவோம்.

விவசாயிகளுக்கு கடன்வழங்கம் திட்டத்தினை அறிமுகப்படுத்துவோம். சுற்றுலாத்துறையினை அபிவிருத்தி செய்வோம்.சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வோம்” இவ்வாறு நாமல் தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply