• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களை சில நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன

கனடா

கனடாவில் வெளிநாட்டு மாணவர்கள் அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சில நிறுவனங்களினால் ஏமாற்றப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் சர்வதேச மாணவர் மற்றும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர் திட்டங்களில் மோசடிகள் இடம் பெற்று வருவதாக குற்றம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

கனடாவிற்கு வருகை தரும் குறைந்த ஊதியம் பெறும் தற்காலிக வெளிநாட்டு பணியாளர்களின் எண்ணிக்கையை வரையறுக்க திட்டமிட்டுள்ளதாக அண்மையில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்திருந்தார்.

இவ்வாறான ஒரு பின்னணியிலே வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை வரையறுக்க உள்ளதாக கனடிய மத்திய அரசாங்கம் அறிவித்திருந்தது.

வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு பணியாளர்கள் கனடாவிற்கு பல்வேறு வழிகளில் அதிகளவான பங்களிப்பினை வழங்குகின்றனர் என அமைச்சர் கிறிஸ்டியா தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த முறைமைகளில் சில துஷ்பிரயோகங்களும் இடம்பெற வாய்ப்பு உண்டு என அவர் தெரிவித்துள்ளார்.

சில நிறுவனங்களின் ஊடாக மோசடிகள் இடம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

சில நிறுவனங்கள் மாணவர்களை அழைத்து நல்ல கல்வி வழங்குவதில்லை எனவும் இந்த திட்டங்களை அந்த நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்வதாகவும் அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார். 
 

Leave a Reply