• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மங்காத்தா நாளில் தி கோட் பட பாடல் - இதைவிட பெரிய சந்தோஷம் கிடையாது.. வெங்கட் பிரபு

சினிமா

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் கோட் திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. திரைப்படம் வரும் செப்-5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது.

படத்தின் 3 பாடல்கள் இதற்கு முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. நாளை படத்தின் 4- வது பாடல் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்தனர். இப்பாடல் ஒரு ஸ்பெஷல் சாங் எனவும். இப்பாடல் மிகவும் எனெர்ஜடிகாக இருக்கும் எனவும், திரிஷா இப்பாடலில் இடம் பெற்றுள்ளார் எனவும் தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதுக்குறித்து இயக்குமர் வெங்கட் பிரபு " நாளை மங்காத்தா நாள், யுவன் ஷங்கர் ராஜா வின் பிறந்தநாள் மற்றும் கோட் திரைப்படத்தின் நான்காவது பாடல் வெளியாகும் நாள், இதற்கு மேல் வேறு என்ன வேண்டும்" என அவரது எகஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி அஜித் நடித்த மங்காத்தா திரைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply