• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாக்குறுதிகளை வழங்கி பொருளாதார வீழ்ச்சிக்கு இடமளிக்கமாட்டோம் – ஜனாதிபதி ரணில்

இலங்கை

வாக்குறுதிகளை அள்ளி வழங்கி பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கமாட்டோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொிவித்தாா்.

ஜனாதிபதி வேட்பாளா் ரணில் விக்கிரமசிங்கவின் கொள்கைப் பிரகடனம் இன்று காலை கொழும்பில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்த ஜனாதிபதி,

நெருக்கடிக்கு மத்தியில் நாட்டை பொறுப்பேற்றேன். இன்று நான் வெளியிட்டது தேர்தல் வேட்பாளர் என்ற ரீதியில் வெளியிட்ட விஞ்ஞாபனம் அல்ல.

நாட்டில்  நடைமுறைப்படுத்தக் கூடியவையே இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. பலர் பல காலத்திட்டங்களை முன்வைத்திருந்தனர். உடனடியாக எது தேவைப்படுகின்றதோ அதனையை செய்வோம்.

வாக்குறுதிகளை அள்ளி வழங்கி பொருளாதாரத்தை மீண்டும் வீழ்ச்சியடைய இடமளிக்கமாட்டோம். ஸ்திரத்தன்மையை மேலும் மேலும் உறுதிப்படுத்தி பொருளாதார அபிவிருத்திக்கு நாட்டை இட்டுச் செல்வதே எமது எதிர்பார்ப்பு.

புதிதாக பொருளாதாரக் கொள்கைத் திட்டங்களை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை இல்லை. எமக்கு வேலைத்திட்டங்கள் உள்ளக சர்வதேச நாணய நிதியம் உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி அதேபோல் கடன் வழங்குனர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தங்கள் காணப்படுகின்றன.

அதனூடாக எமது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.பொருளாதாரம் அபிவிருத்தி அடைந்து வரும் நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க உள்ளோம். உறுமய -20 இலட்சம் காணி உறுதிப்பத்திரம் வழங்கினோம்.

தோட்டமக்களுக்கு காணி உரிமை வழங்குவோம். சிறுநடுத்தர வியாபாரங்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை, வாழ்க்கை செலவினைக் குறைத்தல், வேலைவாய்ப்பு, வரிநிவாரணம் வழங்குதல், பொருளாதார அபிவிருத்திக்காக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், ஏற்றுமதிப் பொளாதாரத்தினை வலுப்படுத்தல் மற்றும் உறுமய, அஸ்வெசும நிவாரணத் திட்டங்களை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லுதல் இவையே எமது திட்டமாகும்.

நாட்டிற்கு புதிய திட்டங்களை முன்வைத்து அதனை செய்வதாக விவாதிக்க வேண்டிய காலம் இதுவல்ல. நடைமுறையில் என்ன தேவைபடுகின்றதோ அதனையே நாம் கூறுகின்றோம். நாட்டில் முதலீடுகளை ஆரம்பித்தல், உற்பத்தித்துறையினை அபிவிருத்தி செய்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையினை வலுப்படுத்தல், டிஜிட்டல் மயமாக்கலை நோக்கி செல்லல் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, அரச தனியார் துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்குவோம்.

இன்று எல்லோரும் கள்வர்களை பிடிப்பதாக கூறுகின்றார்கள். நாம் கள்வர்களைப் பிடிப்பதற்கான சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். அனைவரும் இயலாது என்ற கூறியபோது எம்மாலு இயலும் என்பதாலேயே நான் அன்று நாட்டை பொறுப்பேற்றேன்.

எனவே செப்டெம்பர் 21 ஆம் திகதி அனைவரும் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோருகின்றேன். அன்று முதல் இந்த நாட்டு மக்களின் வெற்றிப்பயணம் ஆரம்பமாகும்” என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply