• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை – பயிற்சி வேலைத்திட்டம் யாழில் முன்னெடுப்பு

இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் ஊடகவியலாளர்களின் கடமை மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பயிற்சி வேலைத்திட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

ஊடகவியலாளர்களின் வகிபங்கை அர்த்தமுள்ள வகையில் அதிகரிக்கச் செய்வதற்காக வியூ அமைப்பினால் குறித்த விசேட பயிற்சி வேலைத் திட்டம் வடக்கு ஊடகவியலாளர்களுக்கு முன்னெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று   நடைபெற்ற இந்த வேலைத்திட்டத்தில் வியூ அமைப்பின் ஆலோசனை சபை பிரதானியும் முன்னாள் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருமான மஹிந்த தேசப்பிரிய மற்றும் வியூ அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினரும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.மொஹமட் ஆகியோர் தலைமை வளவாளர்களாகப் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply