TamilsGuide

கனடாவில் இந்தப் பகுதியில் எரிபொருள் விலையில் வீழ்ச்சி

கனடாவின் கரையோர பகுதிகளில் எரிபொருள் விலையில் சிறு வீழ்ச்சியை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் வார இறுதி நாட்களில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ஆறு சதங்களினால் குறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோவா ஸ்கோசியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 6.3 சதங்களினால் குறைக்கப்படும் எனவும் இதன்படி புதிய விலை 162.5 சதங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கேப் பிரட்டனில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 164.5 சதங்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதே விதமாக டீசலின் விலையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

பிரின்ஸ் எட்வர்ட் தீவுகள் மற்றும் நியூ பிரவுன்ஸ்விக்கிலும் பெற்றோலின் விலை லீற்றர் ஒன்றுக்கு முறையே 6.9 சதம் மற்றும் 6.3 சதம் என குறைக்கப்பட உள்ளது.
 

Leave a comment

Comment