TamilsGuide

பொறுப்பற்ற டிரம்ப்.. புதிய பாதையில் அமெரிக்கா.. - சிகாகோ மாநாட்டில் கமலா ஹாரிஸ் உரை

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பும் போட்டியிடுகின்றனர்.

பிரச்சாரக் களம்

டிரம்ப் இன் பிரச்சாரம் ஜனநாயக கட்சியின் மாநாடு என அமெரிக்காவின் அரசியல் களம் சூடுபிடித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி சிகாகோ மாகாணத்தின் இல்லினாய்ஸ் நகரத்தில் ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாடு தொடங்கிய நிலையில் அன்றைய தினம் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார்.

அதன்பின் அடுத்தடுத்த நாட்களில் ஹிலாரி கிளின்டன், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, அவரது மனைவி மிட்சல் ஒபாமா ஆகியோர் கமலா ஹாரிஸை ஆதரித்து பேசினர். இந்நிலையில் மாநாட்டின் கடைசி தினமான இன்று [ஆகஸ்ட் 23] அதிபர் வேட்பாளர் காமலா ஹாரிஸ் தனது உரையை நிகழ்த்தியுள்ளார்.

புதிய பாதை

கட்சி, இனம், பாலினம், மொழி ஆகியவற்றைத் தாண்டி ஒவ்வொரு அமெரிக்கர் சார்பாக ஜனநாயக கட்சியின் வேட்பாளராகத் தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்த அவர், அமெரிக்காவுக்கு ஒரு புதிய பாதையை வகுக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்தத் தேர்தலின் மூலம் நாம் முன்னோக்கிச் செல்லும் காலம் உருவாகும். அனைத்து அமெரிக்கர்களுக்கும் ஒரு சிறந்த அதிபராக நான் இருப்பேன். நீங்கள் என்னை எப்போதும் நம்பலாம். இந்தத் தேர்தல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் முக்கியமானது.

டிரம்பும் பைடனும்

டொனால்டு டிரம்ப் ஒரு பொறுப்பற்ற மனிதர். அதிபராக இருந்தபோது கிடைத்த எல்லைகளற்ற அதிகாரத்தை தனது சொந்த நலனுக்காக மட்டுமே பயன்படுத்தினார். அவரை மீண்டும் வெள்ளை மாளிகையில் அமர்த்தினால் ஏற்படும் விளைவுகள் எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள் என்று எச்சரித்தார். ஆனால் ஜோ பைடனின் பண்பு உத்வேகம் அளிக்கக்கூடியது. அமெரிக்காவுக்கு அவர் செய்த பங்ங்களிப்பை வரலாறு என்றும் நினைவு கூறும். அவருக்கு என்றும் தான் நன்றிக்கடன் பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தாய் சியாமளா

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தனது தாய் சியாமளா கோபாலன் குறித்து உருக்கமாக பேசிய காமலா ஹாரிஸ், 19 வயதில் பெரிய கனவுகளுடன் தனது தாய் எப்படி கடல் கடல்கடந்து வந்தார் என்று தெரிவித்தார். மேலும் அவரை ஒவ்வொரு நாளும் தான் மிஸ் செய்வதாகவும் குறிப்பாக இந்த சமயத்தில் அவரை மிகவும் மிஸ் செய்வதாகவும் கமலா கூறினார். தனது தாய் கடிமனா தைரியமான பெண் என்றும் தற்போது வானத்தில் இருந்து தன்னைப் பார்த்து புன்னைகைப்பார் என்றும் கமலா நெகிழ்ச்சியுடன் கூறினார்.

காசா போர்

காசாவில் நடந்து வரும் போர் குறித்து பேசிய கமலா, இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ளும் முயற்சிகளுக்கு அமரிக்கா உடன் நிற்கும். ஆனால் காசாவில் நடந்து வரும் அழிவுகள் மிகவும் வருந்தத்தக்கது என்று தெரிவித்தார் 
 

Leave a comment

Comment