TamilsGuide

உயர்நீதிமன்றத் தீர்ப்புக் குறித்து விசேட ஆராய்வு – தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பாக நேற்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ஆராய்வதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் 28ஆம் திகதி கூடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலை தன்னிச்சையாகவும் மற்றும் சட்ட விரோதமாகவும் பிற்போடப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் நிதியமைச்சர் என்ற வகையில், மக்களின் அடிப்படை உரிமைகளை ஜனாதிபதி மீறியுள்ளதாகவும் உயர்நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

தேர்தல் நடவடிக்கைகளை முறையாக திட்டமிட்டு நிர்வகிக்க தேர்தல்கள் ஆணைக்குழு தவறியுள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக எதிர்வரும் 28ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஆராயப்படும் என்றும் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
 

Leave a comment

Comment