TamilsGuide

நிலக்கண்ணி வெடியகற்றலுக்கான நிதிப் பங்களிப்பை ஜப்பான் அதிகாித்தது

வடமாகாணத்தில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் வேலைத்திட்டங்களுக்கான தமது நிதிப் பங்களிப்பை ஜப்பான் அரசாங்கம் மேலும் நீடித்துள்ளது.

சுமார் 300 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு வேலைத்திட்டங்களுக்கான ஒப்பந்தம் கொழும்பில் ஜப்பானின் இலங்கைக்கான தூதுவர் மிசுகோசி இடியேக்கி மற்றும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் இரண்டு நிறுவனங்களின் பிரதானிகளுக்கு இடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தினூடாக வடக்கில் சுமார் 6,000 குடும்பங்களை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்ற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2002ஆம் ஆண்டு முதல் இலங்கையில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளுக்காக பெரும் பங்காற்றி வருகின்ற ஜப்பானிய அரசாங்கம் இதுவரையில் 46 மில்லியன் டொலர்களை அதற்கான நிதியுதவியாக வழங்கியுள்ளது.
 

Leave a comment

Comment