TamilsGuide

நாட்டில் தொடா்ந்தும் வறுமை நிலை அதிகாிப்பு – எரான் கவலை

பொருளாதார சீர்திருத்தங்களுக்கு மத்தியில் அதிகரித்து வரும் வறுமை நிலைகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கவலை வெளியிட்டுள்ளார்.

தற்போதைய சமூக-பொருளாதார சூழல் குறித்து கருத்து தெரிவித்த அவர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க உயர்வடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இந்த எண்ணிக்கை சுமார் 3 மில்லியனிலிருந்து சுமார் 7 மில்லியனாக உயர்வடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த பல இலக்குகளை அரசாங்கம் அடைந்துள்ள நிலையில், மக்கள் மீதான கடுமையான பாதிப்பை அவர் எடுத்துரைத்துள்ளார்.

இவ்வாறான பொருளாதார நிலைமைகளால் தனிநபர்கள் பலர் பெரும் பாதிப்பை எதிர்கொள்வதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

Leave a comment

Comment