• Welcome to TamilsGuide
செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்டபில் தீர்ப்பு

இலங்கை

கடந்த வருடம் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடத்தப்படவிருந்த  உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்தமைக்கு எதிராக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஜனாதிபதியும், நிதியமைச்சரும் அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாக உச்ச நீதிமன்றம் இன்று (22) தீர்ப்பளித்துள்ளது.

அதன்படி, உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

ஐக்கிய மக்கள் சக்தி , தேசிய மக்கள் சக்தி , மாற்றுக் கொள்கை மையம் மற்றும் பாஃப்ரல் நிறுவனம் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பின் போதே, மக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மல்லல்கொட, முர்து பெர்னாண்டோ, காமினி அமரசேகர மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய ஐவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தத் தீர்மானத்தை வழங்கியது.
 

Leave a Reply