• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வாக்குவாதத்தில் மனைவியின் மூக்கை அறுத்த கணவன்... வெளியான அதிர்ச்சி காரணம் 

உத்திரபிரதேச மாநிலத்தில் கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கணவன் தனது மனைவியின் மூக்கை அறுத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் இந்தியாவில் உள்ள உத்தரப்பிரதேச மாநிலம், ஹர்தோய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு தனது சகோதரனுக்கு ராக்கி கட்டிவிடத் தனது தாயின் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என அவரது மனைவி கூறியதை அடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றிய நிலையில் கணவன் மனைவியின் மூக்கை அறுத்துள்ளார்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது கணவன் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply