• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வங்கதேசத்தில் 37 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த இந்தியர் விடுதலை

வங்கதேசத்தில் 37 ஆண்டுகளாக சிறையில் இருந்த இந்தியர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பினார்.

திரிபுராவை சேர்ந்த ஷாஜகான் என்பவர் 1988 ஆம் ஆண்டு வங்கதேசத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது மாமியார் வீட்டில் சோதனை மேற்கொண்ட போலீசார் சட்டவிரோதமாக நுழைந்ததற்காக அவரை கைது செய்தனர்

25 வயதில் கைது செய்யப்பட்ட அவருக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்த பின்பும் வேறு வழக்கிலும் அவரை போலீசார் தொடர்புபடுத்தியதால் அவரது விடுதலை சாத்தியமில்லாமல் போனது

இந்நிலையில், ஜாரா அறக்கட்டளையின் உதவியினால் 37 ஆண்டுகளுக்கு பின்பு இப்போது அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய எல்லையில் பாதுகாப்புப் படையினரிடம் ஷாஜகான் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்படும் போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். இப்போது தான் முதன்முறையாக தனது மகனின் முகத்தை ஷாஜகான் பார்த்துள்ளார்.

தனது விடுதலை குறித்து பேசிய ஷாஜகான், "என்னுடைய மகிழ்ச்சியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நான் சொர்க்கத்தில் இருப்பது போல் உணர்கிறேன். எனக்கு மறு பிறவி எடுத்தது போன்று உள்ளது. இந்த வாழ்நாளில் நான் என சொந்த ஊருக்கு திரும்புவேன் என்று நான் நினைக்கவில்லை. என்னை வீட்டிற்கு அழைத்து வந்தது ஜாரா அறக்கட்டளைக்கு என் வாழ்நாள் முழுவதும் நான் கடமைப்பட்டிருப்பேன்" என்று தெரிவித்தார்.
 

Leave a Reply