TamilsGuide

புதிதாகத் தோற்றம் பெறவுள்ள ஜனஜய முன்னணி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து, ஜனஜய முன்னணி எனும் புதியக் கூட்டணியொன்றை ஸ்தாபிக்கவுள்ளனர்.

இந்தப் புதிய கூட்டணியின் தலைமை பொறுப்பை பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கூட்டணியின் பொதுச் செயலாளர் பதவிக்காக அமைச்சர் ரமேஷ் பத்திரனவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

புதிய கூட்டணியை ஸ்தாபிப்பதற்கான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று பிரதமர் தினேஸ் குணவர்தன மற்றும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரின் தலைமையில் அலரிமாளிகையில் இடம்பெற்ற நிலையிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Comment