• Welcome to TamilsGuide
செய்திகள் 1

My Perfect Husband என்கிற பெயரில் சத்யராஜ் நடிக்கும் ஒரு வெப்சீரிஸ். 

சினிமா

My Perfect Husband என்கிற பெயரில் சத்யராஜ் நடிக்கும் ஒரு வெப்சீரிஸ். அதில்  ஒரு கல்லூரியில் பேராசிரியாக உள்ள சத்யராஜூக்கு மாளிகை போல வீடு இருக்கிறது. வீட்டிலேயே பார்க் ஷெரட்டன் ஓட்டல் சைஸுக்கு ஸ்விம்மிங்பூல் உள்ளது. அதில் இரவு முழுவதும் வெறும் எஃபக்டுக்காக சீரியல் பல்புகள் எரிகின்றன. 

கிரிக்கெட் மைதானம், பூங்கா, ஆலமரம் அரசமரம் எல்லாம் இருக்கிறது. செயற்கை நீர்வீழ்ச்சி உள்ளது. கிட்டத்தட்ட விஜிபி கோல்டன் பீச் போல இருக்கிறது வீடு. வாரிசு படத்தில் விஜய் வீட்டில் பாதி சைஸ் இருக்கிறது எனலாம்.

கல்லூரியில் சாதாரண பேராசிரியராக இருக்கும் சத்யராஜூக்கு இப்படி ஒரு வீட்டை வாங்க அல்லது கட்ட எப்படி துட்டு வந்தது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். மனைவியாக வரும் சீதாவும் ஹவுஸ் ஒயிஃப்தான்.  வீட்டின் ப்ரட் வின்னர் என்று பார்த்தால் அது சத்யராஜ் மட்டுமே. 

பாட்டன் பூட்டன் சேர்த்து வைத்த சொத்தாக இருக்குமோ என்று பார்த்தால் அதுவுமில்லை. ஃப்ளாஷ்பேக்கில் சத்யராஜுக்கு அப்பாவாக வரும் பிஎல் தேனப்பனின் வீடு ஒரு குக்கிராமத்தில் பாழடைந்த நிலையில் இருக்கிறது. வீட்டில் நாலு தட்டுமுட்டு சாமான்களும் தகர டப்பவும் அண்டா குண்டாக்களும் அடுக்கு செட்டிகளும் மட்டுமே உள்ளன. 

இப்படியொரு வீ்ட்டைக் கட்ட லோகி படங்களில் வருவது போல ராப்பகலாக கஷ்டப்பட்டு அபின் ஹெராயின் கடத்தினால் மட்டுமே சாத்தியம். அல்லது யாராவது அப்பாவியின் சொத்தை ஏமாத்தி எழுதி புடுங்கிக் கொண்டால் மட்டுமே முடியும்.

இது ஒரு பக்கமிருக்க, சத்யராஜின் மகனுக்கு பார்த்திருக்கும் மணப்பெண்ணின் அம்மா ரேகா தனது கணவர் சத்யாராஜின் முன்னாள் காதலி என்கிற விஷயம் நடிகை சீதாவுக்கு தெரிய வருகிறது. 'ஒருவேளை மணப்பெண் சத்யாராஜுக்கும் ரேகாவிற்கும இடையேயான தகாத உறவில் பிறந்திருப்பாளோ, அப்படி இருந்தால் ஏடாகூடமாகி விடுமே' என்கிற பதைபதைப்பு சீதாவுக்கு வந்துவிடுகிறது. 

அதை ராஜிடம் நேரடியாகக் கேட்க கூச்சப்பட்டு போய் காதல் கதையை நோண்டி நோண்டிக் கேட்கிறார். அதற்கு சத்யராஜ் தனது காதல் கதையை அவ்வப்போது சொல்லிச் சொல்லி மொக்கை போடுகிறார். அது மரண மொக்கையாக இருந்தாலும் வாக்கப்பட்ட ஒரே பாவத்துக்காக காது கொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கிறார் சீதா. 

இப்படி மொக்கையாக போய்க் கொண்டிருக்கும் சீரிஸின் முடிவு தெரியவில்லை. ஒருவேளை முழுதாகப் பார்த்தால் தெரிவிக்கிறேன்.

Leave a Reply