• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏரிகளுக்கடியில் குவிந்து கிடக்கும் குண்டுகள் - சுவிட்சர்லாந்து அறிவித்துள்ள ரொக்கப்பரிசு

சுவிட்சர்லாந்திலுள்ள ஏரிகள், காண கண்கொள்ளா அழகுடன் காட்சியளிப்பதென்னவோ உண்மைதான். ஆனால், அந்த ஏரிகளுக்கடியில் ஏராளமான குண்டுகள் கிடக்கின்றன என்பது நிச்சயம் சுற்றுலாப்பயணிகளுக்கு தெரிந்திருக்கவாய்ப்பில்லை.

சுவிட்சர்லாந்திலுள்ள ஏரிகளில் பல ஆண்டுகளாக சுவிஸ் ராணுவம் பாதுகாப்பு கருதி குண்டுகளைக் கொட்டிவந்துள்ளது.

Lucerne ஏரியில் மட்டுமே சுமார் 3,300 டன் குண்டுகள் கிடக்கின்றன. Neuchatel ஏரியில் சுமார் 4,500 டன் குண்டுகள் கிடக்கின்றன. இந்த குண்டுகள் 2021ஆம் ஆண்டு முதல் சுவிஸ் விமானப்படை, பயிற்சிக்காக பயன்படுத்திய குண்டுகள் ஆகும்.

ஆகவே, அந்த குண்டுகளை அகற்ற நல்ல ஐடியா கொடுப்பவர்களுக்கு 50,000 சுவிஸ் ஃப்ராங்குகள் பரிசு வழங்க இருப்பதாக சுவிஸ் பாதுகாப்புத்துறை அறிவித்துள்ளது.

விடயம் என்னவென்றால், அந்த குண்டுகளை அப்படியே விட்டுவிட்டால், ஒன்று அவற்றில் சில வெடிக்கும் அபாயம் உள்ளது.

இரண்டு, அவற்றிலிருந்து வெளியாகும் வெடிமருந்து, ஏரி நீரிலும், நீர்ப்படுகையிலும் கலந்து, ஏரி நீரை மாசுபடுத்திவிடும் அபாயமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply