TamilsGuide

வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

திஹகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹக்மன – மாத்தறை பிரதான வீதியின் புஹுல்வெல்ல பகுதியில் நேற்று (18) பிற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹக்மனயில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளதுடன், ஒருவர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகனைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a comment

Comment