TamilsGuide

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைப்பெற்றது

பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்ட முதலாவது திரைப்படமான 'டிமான்ட்டி காலனி-II' வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்துள்ளது.

இந்நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ். இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி,மணிகண்டா ராஜேஷ், ஆனந்தராஜ், இளவரசு, ஜான் விஜய், சுனில் ரெட்டி, ரெடின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன்,பிபின்,ஹுசைனி, உள்பட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதத்துடன் முழு படப்பிடிப்பும் முடிந்து வெளியிட்டுக்கு தயாராகியுள்ளது.

அதனையொட்டி இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று(18-08-24) சென்னையில் நடைபெற்றது. திரைப்பட குழுவினர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நடிகர் இளவரசு

பின்னர் நடிகர் இளவரசு பேசும் பொழுது,"தயாரிப்பாளர்கள் எனக்கு பேசியதைவிட அதிக சம்பளம் கொடுத்தனர், நான் திரும்ப கொடுக்கிறேன் என்றவுடன் நாகரிகமாக திரும்ப பெற்றுக் கொண்டனர். " என்றார்.

நடிகர் வைபவ்

நடிகர் வைபவ் பேசும்பொழுது," தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் மற்றும் மனோஜ் பெனோ இருவருக்கும் மிக்க நன்றி. இங்கு வந்து வாழ்த்திய சகோதரர் அருண் விஜய், இமான், இயக்குனர்கள் மற்றும் சக நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். "

தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரன் பேசும்போது,"எங்களது முதல் திரைப்படமான 'டிமான்ட்டி காலனி-II இயக்குனர் அஜய் ஞானமுத்து மற்றும் எங்களது அடுத்த திரைப்படம் ஆன 'ரெட்ட தல' திரைப்படத்தின் ஹீரோ அருண் விஜய் இருவருக்கும் மிக்க நன்றி.

சிறப்பான நடிகர்களை ஒன்றிணைத்து, தரமான நகைச்சுவை கலந்த பொழுதுபோக்கு திரைப்படத்தை அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தை எடுத்துள்ளோம். அது உங்களை மகிழ்விக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். ஊடகத்துறையினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்," என தன் பேச்சை நிறைவு செய்தார்.

வியூகத் தலைமையாளர் மனோஜ் பெனோ

வியூகத் தலைமையாளராக இருக்கும் மனோஜ் பெனோ பேசும்போது, "பாபி பாலச்சந்திரனை எனக்கு சிறுவயதிலிருந்தே தெரியும். பாபி அவர்கள் இதுவரை ஈடுபட்டிருக்கும் அனைத்து தொழில்களும் வெற்றி அடைந்துள்ளன. அதேபோல இதுவும் வெற்றிடைய வேண்டும் என அவரது தந்தை விரும்பினார்.

"எங்களது அடுத்த படமான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படம் வெற்றியடைய உங்களது அனைவரது ஆதரவையும் வேண்டுகிறேன்", என முடித்தார்.

இத்திரைப்படம் செப்டம்பர் மாதம் வெளியாகவுள்ளது.

Leave a comment

Comment