• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டவர்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ள துறைகள்

சுவிட்சர்லாந்தில், பெருமளவு ஊதியம் வழங்கும் பணிகளில் வெளிநாட்டவர்கள்தான் இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சுவிட்சர்லாந்தில் 1.12 மில்லியனுக்கும் அதிகமாக வெளிநாட்டவர்கள் பணி செய்கிறார்கள்.

விடயம் என்னவென்றால், கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் தகுதி படைத்த பணியாளர்களைக் கண்டுபிடிப்பது பணி வழங்குவோருக்கு கடினமாக உள்ளதாம்.

பல துறைகளில் பணியிடங்கள் பல காலியாக இருக்க, பணியாளர்களைக் கண்டுபிடிப்பது கடினமாக உள்ளதாம்.

ஆகவே, சுவிஸ் நிறுவனங்கள் பல வெளிநாடுகளிலிருந்து பணியாளர்களை பணிக்கமர்த்துகின்றன. குறிப்பாக ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தக ஒப்பந்த நாடுகளிலிருந்தே அதிக அளவில் பணியாளர்களை பணிக்கமர்ந்துகின்றன இந்த நிறுவனங்கள்.

இருந்தாலும், சுவிஸ் தொழிலாளர் சந்தைக்கு மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த தொழில்துறை நிபுணர்களும் தேவைப்படுகிறார்கள், குறிப்பாக அமெரிக்கா மற்றும் பிரித்தானியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தகவல் தொழில்நுட்பம், மருத்துவம், கட்டுமானம், ஹொட்டல்கள் மற்றும் உணவகங்கள், சில்லறை வர்த்தகம் மற்றும் சேவைத் துறைகளுக்கு பெரும்பாலும் சுவிட்சர்லாந்து வெளிநாட்டவர்களையே நம்பியிருக்கிறது.

இந்த இடத்தில்தான் சுவிட்சர்லாந்துக்கு மூன்றாம் நாட்டவர்கள் தேவைப்படுகிறார்கள். அதாவது, இந்தப் பணிகளுக்கு கல்வித் தகுதியும் திறமையும் படைத்த பணியாளர்கள் தேவை. ஐரோப்பிய ஒன்றியத்தோரைவிட மூன்றாம் நாட்டவர்கள் இந்த விடயத்தில் சற்று மேம்பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆக, பெருமளவு ஊதியம் வழங்கும், உயர் தகுதி பணிகளுக்கு வெளிநாட்டவர்கள்தான் உகந்தவர்களாகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply