• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிட்னி தண்டர்ஸ் அணியில் சமரி அதபத்து

இலங்கை

இலங்கையின் பெண்கள் கிரிக்கெட் அணித்தலைவி சமரி அதபத்து, ஒக்டோபர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய மகளிர் பிக் பாஷ் லீக்கில் (WBBL) பங்குபற்றும் சிட்னி தண்டர்ஸ் அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்கு முன்னைய தொடரில் (2023-24) சிட்னி தண்டர்ஸ் அணிக்காக அவர் விளையாடினாலும், காயமடைந்த வீராங்கனை ஒருவரை பிரதிநிதித்துவபடுத்துவதற்காகவே அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது.

இருப்பினும் அந்த தொடரில் சமரி அனைத்து சுற்றுகளிலும் சிறப்பாக விளையாடியதுடன்,  5 அரை சதங்களுடன் 552 ஓட்டங்கள் எடுத்தார்.

இது ஒரு இன்னிங்ஸின் சராசரி 42.46 ஆக காணப்பட்டதுடன், பெண் துடுப்பாட்ட வீராங்கனை ஒருவர் பெற்ற இரண்டாவது அதிகபட்ச ஓட்டங்களாகும்.

அதுமட்டுமின்றி, அவர் சிட்னி தண்டர்ஸ் அணிக்காக 9 விக்கெட்டுகளையும் வீழ்த்தி  போட்டியின் நாயகிக்கான விருதை பெற்றுக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply