• Welcome to TamilsGuide
செய்திகள் 1

எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் உள்ள நட்பு ...

சினிமா

மாஞ்சேரி நாராயணன் நம்பியார் என்பதன் சுருக்க பெயர்தான் எம்.என்.நம்பியார் .ஜூபிடர் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தங்களது படங்களில் தொடர்ந்து நடிக்க மாத சம்பளத்திற்கு நம்பியாரை ஒப்பந்தம் செய்ய விரும்பி அழைத்தது .

நம்பியாரும் அங்கே சென்றார் .* ஏற்கனவே அந்நிறுவனத்தில் மாத சம்பள நடிகராக இருந்த எம்.ஜி.ஆர். முன்பின் பரிச்சயம் இல்லாதபோதும் நம்பியார் மீது அக்கறை கொண்டு உங்கள் திறமையை வியக்கும் முதலாளிகள் உங்களுக்கு மாத சம்பளமாக ஒரு நல்ல தொகையை பேசவிருக்கிறார்கள் .* அதனால் இந்த தொகையை (உதாரணமாக நூறு ரூபாய் கேளுங்கள் ) என நம்பியாரிடம் சொன்னார் .

இந்த ஆள் இந்த கம்பெனியில் ரொம்ப நாளாக மாத சம்பள நடிகராக இருக்கிறார் .நம்மை இந்த கம்பெனி முதலாளிகள் நிராகரிக்க வேண்டும் என்கிற கெட்ட எண்ணத்தில் பெரிய தொகை கேட்க சொல்கிறாரோ என எம்.ஜி.ஆர். மீது சந்தேகம் கொண்டார் நம்பியார் .**

ஜூபிடர் முதலாளிகளான சோமசுந்தரமும், மொய்தீனும் நம்பியாரை அழைத்து பேசி மாத சம்பளம் என்ன வேண்டும் என கேட்க நம்பியார் முன்யோசனையுடன்*குறைந்த சம்பளம் கேட்டார் .* (உதாரணம் ஐம்பது ரூபாய் ).**

ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்த நம்பியார் , ஏதோ சந்தேகம் கேட்க மீண்டும் அறைக்குள் நுழைய போனபோது கம்பெனி முதலாளிகள் பேசிக்கொள்வது நம்பியாரின் காதில் தெளிவாக விழுந்தது ...

மாத சம்பளமாக நம்பியாருக்கு நல்ல தொகை தரலாம் என நினைத்தோம்*அவரோ குறைந்த தொகை போதும் என சொல்லிவிட்டாரே என வியப்பு தெரிவித்தனர் . முதலாளிகள் இருவரும் நம்பியாருக்கு தர திட்டமிட்டிருந்த தொகையைத்தான் எம்.ஜி.ஆர். கேட்க சொன்னார் .**

இதை உணர்ந்த நம்பியார் , அடடா நமக்கு நல்லது சொன்ன ராமச்சந்திரனை சந்தேகப்பட்டு விட்டோமே, என சங்கடமானார் .* அன்றில் இருந்து தொடங்கியது*எம்.ஜி.ஆர். நம்பியார் நண்பேன்டா சரித்திரம் .

எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமான ஜூபிடர் தயாரித்த ராஜகுமாரியில்*எம்.ஜி.ஆரின் நண்பராக நடித்தார் நம்பியார் .* ஒரு காட்சியில் எம்.ஜி.ஆர். தூக்கு மாட்டி கொள்ள வேண்டும்.* ஆனால் இயற்கை அவரை சாக விடாதபடி தூக்குமேடையின் பள்ளத்தில் எம்.ஜி.ஆர். விழுந்துவிடுவதாக காட்சி.**ஆனால் திட்டமிட்டதற்கு மாறாக தூக்கு கயிறு எம்.ஜி.ஆரின் கழுத்தை இறுக்க*சட்டென விரைந்து செயல்பட்டு எம்.ஜி.ஆரை கயிற்றிலிருந்து விடுவித்தாராம் நம்பியார் ...

எம்.ஜி.ஆர். நம்பியார்* நட்பில் சிலசமயம் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிகழ்வுகளும் உண்டு.* இதுபற்றி நம்பியாரை ஒருமுறை சந்தித்து நாம் கேட்டபோது , நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்னு தலைப்பு வைச்சு நான் சொல்றத எழுதுங்க .* எம்.ஜி.ஆர்ன்னாலே அடுத்ததா நினைவுக்கு வருவது நம்பியார்.* அப்படி இருக்கையில் நம்பியாரை அம்போனு விட்டுட்டு அரசியல்ல இறங்கி முதலமைச்சராகி விட்டாரே .* இது நண்பன் நம்பியாருக்கு எம்.ஜி.ஆர். செய்த துரோகம்தானே , என பதில் தந்தார் நம்பியார் .

எம்.ஜி.ஆயருக்கு வில்லனாகவே பார்த்து பழகிய நம்பியாரை ஹீரோவாக வும் மாற்றி யோசித்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் எம்.ஜி.ஆர். அந்த படம் நினைத்ததை முடிப்பவன் ...

Alagu Muthu

Leave a Reply