• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சூடு பிடித்துள்ள தேர்தல் களம்

இலங்கை

2024ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் முற்பகல் 11 மணியுடன் நிறைவிற்கு  வந்துள்ளது.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகக் கேட்போர் கூடத்தில் இன்று காலை 9.00 மணிக்கு வேட்பு மனு ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பமானது

இதன்போது விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் குறிக்கப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது

பாதுகாப்பு கடமைகளில் அதிகளவான பொலிஸார் ஈடுப்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.

மேலும், வேட்புமனு தாக்கல் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிக்க காலை 9.00 மணி முதல் 11.30 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மேலதிக ஒருமணித்தியால காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் 40 வேட்பாளர்கள் நேற்று நண்பகல் 12 மணிவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்

இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் ஜனாதிபதி தேர்தலாக 2024ஆம் ஆண்டுக்கான தேர்தல் பதிவாகியுள்ளது

அந்த வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை கையளித்துள்ளனர்.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் இந்த செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.

அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார உள்ளிட்டோரும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்குச் சென்றுள்ளனர்.

அதேநேரம், தமிழ்ப் பொது வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடவுள்ள பா.அரியநேத்திரன் தமது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பென்சேகா, மக்கள் போராட்ட முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் சட்டத்தரணி நுவன் போபகே உள்ளிட்டோரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

மேலும் மௌபிம ஜனதா கட்சியின் தலைவர் திலித் ஜயவீர ஜனாதிபதி தேர்தலுக்கான முதலாவது வேட்புமனுவை கையளித்தார்.

இதனிடையே ஜனாதிபதி தேர்தல் குறித்து அறிவிக்கப்பட்ட தினம் முதல் இதுவரையான காலப்பகுதிக்குள் பதிவானவற்றில் வன்முறை சம்பவமொன்றும் தேர்தல் சட்டத்தை மீறிய 392 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.

எவ்வாறாயினும் இம்முறை ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வேட்புமனு தாக்கல் செய்யும் நாள் வரையிலான காலப்பகுதிக்குள் பதிவாகும்.

தேர்தல் வன்முறைகளின் எண்ணிக்கையானது கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply