• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இங்கிலாந்தில் பழம் சாப்பிட்டு இஸ்ரேலில் மரக்கன்றுகள் வாங்கி.., கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியர் யார்?

இந்திய இளைஞர் ஒருவர் அவகாடோ பழங்களை விளைய வைத்து வருடத்திற்கு ரூ.1 கோடி வரை சம்பாதித்து வருகிறார்.

கோடீஸ்வர இளைஞர்

மத்திய பிரதேச மாநிலம் கடுமையான வெப்பமான மாநிலம் என்பதால் அவகோடா வளருவதற்கு ஏற்ற வானிலை கிடையாது. இந்த பழங்கள் வடகிழக்கு இந்தியா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் விளைகின்றன.

இவை வளர்வதற்கு 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலையே தேவைப்படுகிறது. அதற்கு மேல் அல்லது அல்லது கீழ் இருந்தால் இந்த பழங்கள் தாக்குபிடிக்காது.

இந்த மாதிரியான சூழ்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள இளம் விவசாயியான ஹர்ஷித் கோதா அவகோடா பழங்களை விளைய வைத்துள்ளார்.

இதன்மூலம் ஆண்டுக்கு ரூ.1 கோடி வரை வருமானம் பெறுகிறார். விவசாயத்தின் மீதுள்ள ஆர்வத்தால் முதலில் இஸ்ரேலில் இருந்து 10 மரக்கன்றுகளை இறக்குமதி செய்துள்ளார். தற்போது போபாலில் 10 ஏக்கர் அளவிற்கு அவகாடோ தோட்டங்களை வைத்துள்ளார்.
எப்படி சாத்தியமானது?

போபாலில் பிறந்த ஹர்ஷித் கோதா பள்ளிப்படிப்புக்குப் பிறகு, வணிகம் படிக்க இங்கிலாந்து சென்றார். இவர் விவசாயத்தில் நுழைவார் என்று நினைக்கவே இல்லை.

இதுகுறித்து ஹர்ஷித் கோதா கூறுகையில், "அவகாடோ பழங்கள் நமக்கு மிக எளிதாக கிடைக்கக்கூடியதாகவும், சத்து நிறைந்ததாகவும் இருக்கும். அது எனக்கு ரொம்ப பிடிக்கும்.

இங்கிலாந்து நாட்டில் ஒவ்வொரு நாளும் அந்த பழத்தை சாப்பிட்டேன். ஒருநாள் அவகாடோ பெட்டியைப் புரட்டி பார்த்த போது இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது என்று இருந்தது.

அப்போது தான் இஸ்ரேல் போன்ற வறண்ட இடங்களில் எப்படி அவகாடோ பழங்களை விளைவிக்கிறார்கள் என்று ஆராய்ச்சி செய்தேன்.

இஸ்ரேலில், வானிலைக்கு ஏற்றபடி உரங்கள், நீர் ஆகியவற்றை கொடுத்து பழங்களை வெற்றிகரமாக வளர்த்துள்ளதை கண்டுபிடித்தேன். அதேபோல இந்தியாவிலும் செய்ய விரும்பினேன்" என்றார்.       
 

Leave a Reply