• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கமலா ஹாரிஸ் அதிபரானால் அமெரிக்காவை அழித்து விடுவார்

அமெரிக்காவில் இந்தியவம்சாவழி பெண் கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்றும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளுருமான டொனால்ட் ட்ரம்பை, எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் நேர்காணல் செய்தார். ஸ்பேஸ் தளம் வழியாக நேர்காணல் நடைபெற்றபோதே டிரம்ப் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது எலான் மஸ்கின் கேள்விகளுக்கு பதிலளித்த ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து ஜோ பைடன் வெளியேறியது ஒரு சதி என்றும் அவரை மிரட்டிப் பணியவைத்துள்ளனர் என்றும் கூறினார்.

ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் அதிகப்படியாக தற்போது விளையாடிக் கொண்டிருப்பதாகவும், அவர்களை தன்னை போன்ற ஒரு அதிபரால் மட்டுமே சமாளிக்க முடியும் என்றும் டொனால்ட் ட்ரம்ப் கூறினார்.

அதேவேளை தான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருக்காது என்றும் தெரிவித்தார். 4 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்க மக்கள் பணத்தை மிச்சப்படுத்தினார்கள் என்றும் ஆனால் தற்போது கடன் வாங்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்பொழுத்து அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும், கமலா ஹாரிஸ் அதிபராக தேர்வானால் அமெரிக்காவை அவர் அழித்து விடுவார் என்றும் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளமை பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Reply