• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க பல காரணங்கள் உண்டு. 

சினிமா

மக்கள் திலகம் எம்ஜிஆர் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடிக்க பல காரணங்கள் உண்டு. அவற்றை எல்லாம் சொல்லிக்கொண்டே போகலாம். இருந்தாலும் அவ்வளவு நேரம் நமக்கு இருக்காது. அதனால் அவற்றில் இருந்து முத்தாய்ப்பான சில சம்பவங்களை நாம் இங்கு அசைபோடுவோம். அண்ணாதுரை கண்ணதாசன் தன் அப்பாவுக்கும், எம்ஜிஆருக்குமான சில நெஞ்சைத் தொடும் சம்பவங்களைப் பற்றி நினைவு கூறுகிறார். வாங்க என்னன்னு பார்ப்போம்.

மக்கள் திலகம் எம்ஜிஆர் உலகம் சுற்றும் வாலிபன் படத்தைத் துவங்கிய நேரம். அப்போது எம்ஜிஆர் கண்ணதாசனை அழைத்துப் பாடல் எழுத அழைத்தாராம். இதன்படி கண்ணதாசனும் எம்ஜிஆர் அலுவலகத்திற்குப் போனாராம். அங்கு பாடலின் பல்லவி எழுதிவிட்டுத் திரும்பி விட்டாராம். அன்று மாலை எம்ஜிஆருக்குப் போன் போட்டாராம்.

குன்னக்குடி வைத்தியநாதன் இந்தப் படத்திற்கு செட்டாக மாட்டார். இதற்கு எம்எஸ்.வி.யால் மட்டும் தான் முடியும் என்றார். அப்போது பலரும் கவிஞருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை என பலரும் அப்பாவை சொன்னார்கள். இவருக்கு வாய்ப்பு போகப்போகுதுன்னு சொன்னாங்களாம்.

அதன்பிறகு எம்ஜிஆர் 2 மாதங்களாகியும் கண்ணதாசனுக்கு பதில் சொல்லவில்லையாம். அப்புறம் நீங்க சொன்னது சரி தான் என்று எம்ஜிஆர் கண்ணதாசனின் ஆலோசனையை ஏற்றுக் கொண்டார். பாடல்களும் அதன்பிறகு எழுதி படமும் அபார வெற்றி பெற்றது. அதே போல குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் வேறு படம் கொடுப்பதாக சொன்னோமே என அவருக்கு நவரத்தினம் படத்தைக் கொடுத்தாராம். அதன்படி யார் ஆலோசனை சொன்னாலும் அது சரியானால் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் எம்ஜிஆருக்கு உண்டு.
 

Leave a Reply