• Welcome to TamilsGuide
செய்திகள் 1

100 சிவாஜி புகைப்படங்களை  வெட்டி ஒட்டி,எம்ஜிஆர் உருவம்

சினிமா

ஓவியர் ஒருவர் 100 சிவாஜி புகைப்படங்களை  வெட்டி ஒட்டி,
ஒரு எம்ஜிஆர் உருவத்தை உருவாக்கினார்...
இந்தப் படம் அன்றைய 
குமுதம் வார இதழில் பிரசுரமானது...
ஒரு எம்ஜிஆர் அவர்களுக்கு, 
100 சிவாஜி சமம் என்கின்ற 
கருத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டது...
மக்கள் திலகம் எம்ஜிஆர் ரசிகர்களிடையே பெருத்த ஆதரவையும், அதே சமயத்தில் சிவாஜி கணேசன் ரசிகர்களிடையே கடும் எதிர்ப்பையும் இந்த படம் ஏற்படுத்தியது...
இந்தப் படத்தை உருவாக்கிய 
ஓவியரை நேரில் அழைத்து, 
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் கண்டனம் தெரிவித்தார்...
மக்கள் திலகம் எம்ஜிஆர்  
படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி, மக்கள் திலகத்திடமே தங்கியிருந்த இடிச்சப்புலி செல்வராஜ் என்பவரின் தம்பி தான் இந்த ஓவியர்.
இடிச்சப்புலி செல்வராஜ் பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்திருக்கிறார்... 
நூறு சிவாஜி புகைப்படங்களை வைத்து ஒரு எம்ஜிஆர் புகைப்படத்தை உருவாக்கிய அந்த ஓவியர் பெயர் பாண்டு.
இவர் பின்னாளில் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார்.
இதோ அந்த எம்ஜிஆர் படம் 
உங்கள் பார்வைக்காக...
நன்றி:
படம் உதவி Sathya Creation.

Leave a Reply