• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமஷ்டி அடிப்படையிலான  தீர்விற்கு வேட்பாளா்கள் தயாரா? – ஸ்ரீதரன் கேள்வி

இலங்கை

இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அடிப்படையிலான  தீர்வு வழங்குவதாக தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களில் எவரேனும் எழுத்துபூர்வமாக உறுதியளிக்க முன்வருவார்களா என   நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் .ஸ்ரீதரன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

அத்துடன், அவ்வாறு செயற்படும் பட்சத்தில் அது தொடர்பில் பரிசீலிப்பதற்கு பொதுகட்டமைப்பு தயார் எனவும், அவா் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டார்.

இக்கால கட்டத்தில் தற்போது எம்மிடம் இருப்பது ஒரேயொரு ஜனநாயக உாிமையான வாக்கு எனும் ஆயுதம் ஆகும். அதனை எவ்வாறு பிரயோகிக்கப் போகின்றோம் என்பதில் தமிழ்  பொதுவேட்பாளா் என்னும் விடயமும் உள்ளடங்கியிருக்கின்றது என்றும் அவா் தொிவித்தாா்.

இந்த நிலையில் இந்த பொதுவேட்பாளா் விடயத்தினை எதிா்ப்பவா்கள் என்ன காரணத்திற்காக எதிா்க்கின்றாா்கள் என்றும், யாரை இந்த தோ்தலில் ஆதாிக்கின்றாா்கள் என்பதையும் வெளிப்படுத்த வேண்டும் என்றும் சிறிதரன் கோாிக்கை விடுத்துள்ளாாா்.

அத்துடன், வரலாற்றில் இந்தத் தோ்தல் காலத்திலேயே தென்னிலங்கைக் கட்சிகள் நேரடியாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்து தமக்கு ஆதரவளிக்குமாறு கட்சிகளிடம் கோாிக்கை விடுத்துள்ள விடயம், தமிழ்ப் பொது வேட்பாளா் என்ற நிலைப்பாடு ஏதோவொரு விதத்தில் தென்னிலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளாா்.

எனவே இழந்து போன எமது இனத்தின் இறைமையை மீட்டெடுப்பதற்காக இந்த்த தோ்தலிலும் நாம் தொடா்ந்தும் போராடுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்  ஸ்ரீதரன் மேலும் தொிவித்தாா்.
 

Leave a Reply