• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா வாழ்ப் பெண் தமிழுறவின் தாயக வருகையும் திரியாய் பெண் தலைமைத்துவப் பெண்கள் சந்திப்பும்.....

கனடா

கனடா வாழ்ப் பெண் தமிழுறவு  யோகா பத்மநாதன் அம்மணி அவர்கள் இன்றைய நாள் திரியாய்ப் பெண் தலைமைத்துவ குடும்பங்களோடு மகிழ்வின் சந்திப்பை நிகழ்த்தி இருந்தார்.
ஏற்கனவே யோகா அம்மணி அவர்கள் திரியாய்ப் பெண் தலைமைதாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக கோழிக் குஞ்சுகள், பாலர் பாடசாலை மாணவர்களுக்கான  கற்றல் உபகரணங்கள், பெண் தொழில் முயற்சியாளர்களுக்கான நிரந்தர வாழ்வாதார பொருட்கள் என்பவற்றை ஒழுங்கு செய்து இருந்தார்.

திரு வின் மகாலிங்கம் 
திரு வேல்றைந்தன் ஐயா (18பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான் நிரந்தர வாழ்வாதார உதவி )
இவர்கள் எம்முடைய மக்களுக்கான தொடர் வாழ்வாதாரப் பணிகளை ஆற்றிவருகின்றனர்.
அதுமட்டுமற்றி கனடா ஒன்றிய ஒருங்கிணைப்புக் குழு உறவுகளின் அன்பின் வெளிப்பாடாக
 உடுபுடைவைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
#தேவை_அறிந்த_தகைசார்_சேவை 
நிகழ்வில் அம்மணி அவர்களினால் பெண்களுக்கான காத்திரமான அறிவுரைகள் ஆலோசனைகள்  எனப் பல்வேறுபட்ட கருத்துகள் பரிமாறப்பட்டன. இவ்விதமான  நிகழ்வுகளுக்கான ஏற்பாடுகளை  கடந்த வருடம் முதல் திரியாய் மைந்தர்கள் அமைப்பின் செயலியக்குனர் திரு பாலச்சந்திரன் இராகவன் செய்து வருகிறார்....
இவண் 
திரியாயூரன்

 

Leave a Reply