• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கதாநாயகனைக் காட்டுற ஓபனிங் சீன் ரொம்பவே வித்தியாசமா இருக்கும்

சினிமா

கதாநாயகனைக் காட்டுற ஓபனிங் சீன் ரொம்பவே வித்தியாசமா இருக்கும். படம் ஆரம்பிச்சி 25வது ஷாட்ல தான் முகத்தையே காட்டுவாங்க. இப்படி எந்த ஒரு படத்திலயும் காட்டினது இல்லை. தெய்வமகன் படத்துல சிவாஜி வர்ற ஓபனிங் சீனைப் பார்த்தால் தான் இது புரியும். ஆரம்பத்துல இருந்து அவர் வர்றது போறது எல்லாம் காட்டுவாங்க. கைக்கடிகாரத்துல மணி பார்க்குறது, ஸ்டெனோ கிட்ட பேசறது, நடந்து போறது, வேலைக்காரன் கிட்ட பேசுவாருன்னு எல்லாம் தொடர்ச்சியாக சிவாஜியின் பேக்ஷாட், டாப் ஆங்கிள், நிழல் உருவம் இப்படியே தான் காட்டிக்கிட்டு இருப்பாங்க.

குரல் கூட வரும். ஆனா முகத்தைக் காட்ட மாட்டாங்க. எப்படா தலைவர் முகத்தைக் காட்டுவாங்கன்னு ரசிகர்களுக்கு ஆவலை அதிகமா வரவச்சிருப்பாரு இயக்குனர் திருலோகசந்தர். டாக்டர் மேஜர் சுந்தரராஜன் கிட்ட சிவாஜி பேசுறப்ப குரல் மட்டும் தான் வரும். மேஜரைத் தான் காட்டுவாங்க. அப்பவாவது சிவாஜியோட முகத்தைக் காட்டுவாங்கன்னு பார்த்தா நடிகர் திலகத்தைக் காட்ட மாட்டாங்க. 20வது ஷாட்ல ஆஸ்பிட்டல்ல குழந்தைகள் படத்தை எல்லாம் பார்ப்பாரு. கையில தங்கக் காசுகளை வைத்துக் கொண்டு படத்தைப் பார்ப்பாரு. அப்போ அவரோட பின்பக்கம் மற்றும் உடல் அசைவுகள் நடிப்பதைப் பார்க்கலாம். ஆபரேஷன் தியேட்டர்ல இருந்து மேஜர் வரும்போது என்ன குழந்தைன்னு கேட்பாரு.

ஆண்குழந்தைன்னு சொன்னதும் அவரு வேகமா ஓடிப்போய் பார்க்கப் போவாரு. அவசரப்படாதே அப்புறம் பார்க்கலாம்னு சொல்லியும் கேட்காம ஓடுவாரு. 22வது ஷாட்ல சிவாஜியோட கால்கள் நடிக்கும். 23வது ஷாட்ல 'ஏமாத்திட்டீயே ராஜூ'ன்னு சொல்வாரு. 'இதுக்கு யாரும் பொறுப்பாளி அல்ல. இயற்கையோட விளையாட்டு. ஆழ்ந்த அனுதாபங்கள்'னு சொல்வாரு மேஜர். அதற்கு சிவாஜி யாருடைய அனுதாபமும் எனக்குத் தேவையில்லன்னு சொல்வாரு. இப்போ கேமரா மெதுவா சிவாஜி முதுகுக்குப் போகும். 'ராஜூ என் குழந்தையைக் கொன்னுரு'ன்னு சொல்வார் சிவாஜி.

மேஜர் அதிர்ந்து போய் 'சங்கர் என்ன சொல்றே'ன்னு சொல்வாரு. 25வது ஷாட்ல சிவாஜி தடால்னு திரும்பி முகத்தை அசைச்சி அசைச்சி மேஜருக்க முன்னால காட்டுவாரு. இப்படி சிவாஜியோட முகத்தைப் பார்க்கறதுக்கு இவ்ளோ ஷாட் தேவைப்பட்டுருக்கு. 'ராஜூ என் முகத்தைப் பாரு. பார்க்க முடியல இல்ல. என்னப் போலவே பொறந்த என் குழந்தையைக் கொன்னுரு'ன்னு சொல்வாரு. மேஜர் 'முடியாது'ன்னு சொன்னதும் சிவாஜி 'செத்துடுவேன்'பாரு. சிவாஜி இப்படி சொன்னதுக்குப் பிறகு 'உன் மனைவி வீட்டுக்கு வர்றப்ப தனியா தான் வருவார்'னு சொல்லி முடிச்சிருவார் மேஜர். இப்படி உணர்ச்சிகளைக் கொட்டி நடித்து அசத்தி இருப்பார் நடிகர் திலகம்.
 

Leave a Reply