• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பணியிலிருந்து ஓய்வு பெற்றார் பட்டிமன்றம் ராஜா

சினிமா

பணியிலிருந்து ஓய்வு பெற்றார் பட்டிமன்றம் ராஜா'என்ன பதவியில் இருந்தார் தெரியுமா பட்டிமன்றம்' ராஜா. வங்கியில் உயர் பதவியிலிருந்து இன்றோடு ஓய்வு பெறுகிறார். நீண்டகால வங்கிப் பணியை நிம்மதியாக நிறைவு செய்ததற்காக மதுரை மீனாட்சியம்மனை தரிசிப்பதற்குச் சென்று கொண்டிருந்தவரிடம் பேசினேன். ''ரொம்ப ரொம்ப திருப்தியா இருக்கு. 1984-ம் ஆண்டு படிப்பு முடித்த கையோடு ஏதாவது நல்ல வேலை கிடைக்காதானுதான் பேங்க் வேலைக்கு வந்தேன். கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் வங்கிப் பணியில் இருந்துவிட்டேன். இப்போது எனக்கு, 59 வயது ஆகிறது. மக்களுடன் மக்களாக வங்கியிலும் பட்டிமன்றப் பேச்சாளராக இத்தனை வருடம் நான் பயணித்ததற்கும் மீனாட்சி அம்மனுக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். எந்த ஒரு நல்ல காரியமாக இருந்தாலும் மீனாட்சி அம்மனை வணங்கிவிட்டுத்தான் தொடங்குவேன். இதோ, இத்தனை வருடகாலம் என் உடல் நலத்தைப் பேணிக்காத்த அம்மனை வணங்கத்தான் செல்கிறேன்'' என்று உணர்ச்சிவசப்பட்டவர்,

உழைக்க ஒரு காலம், ஓய்வு எடுக்க ஒரு காலம் என ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் ஒவ்வொரு காலத்தையும் தாண்டி வருவான். அப்படி எனக்கு உழைப்பதற்கான வயதையும் ஓய்வுக்கான வயதையும் சரியான நேரத்தில் செலவிடுகிறேன். இடையில், நடிப்பு, பேச்சு என எனக்காகச் சலுகைகள் தந்த வங்கிக்கு எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் பணிபுரிந்த இடமும் சரி, குடும்பமும் சரி எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் நன்றிகள்'' என்றவரிடம், "இனி எந்த ஒரு தடையும் இல்லாமல் நடிக்கலாமே. நடிப்பையும் பேச்சையும் தொடர்வீர்களா..?'' எனக் கேட்டதற்கு, 'நிச்சயமாக... பேச்சுதான் எனக்கு உயிர் மூச்சு. அதை விட முடியாது. கண்டிப்பாக என்னைப் பட்டிமன்ற மேடைகளில் தொடர்ந்து பார்க்கலாம்.

சாலமன் பாப்பையாவுடன் இணைந்து சன் டிவிக்காகப் பட்டிமன்றங்களில் பேசிவரும் இவர், 'வாங்க பேசலாம்' நிகழ்ச்சியில் பாரதி பாஸ்கருடன் இணைந்து அந்தந்த நாள்களுக்கான சிந்தனைகள் பற்றிப் பேசியவர். தன் நகைச்சுவையான பேச்சின் இடையே சமூக சிந்தனைக் கருத்துகளைப் பேசுவது ராஜாவின் பலம். பாரதி பாஸ்கரும் ராஜாவும் எப்போதும் எதிரெதிர் அணியில் இருப்பவர்கள். ஒவ்வொருவரும் போட்டிபோட்டுக் கொண்டு பேசும்போதுதான் கைத்தட்டலால் அரங்கே அதிரும். 7,000-க்கும் மேற்பட்ட மேடைகளில் பேசியிருக்கும் சிறப்புக்கு உரியவர் 'பட்டிமன்றம்' ராஜா என்பது குறிப்பிடத்தக்கது. வங்கிப் பணியை நிறைவு செய்திருக்கும் ராஜாவை நாமும் வாழ்த்துவோம்.
 

Leave a Reply