• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சுவிட்சர்லாந்தில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரர்! வியக்க வைக்கும் தகவல்கள்

சுவிஸில் உள்ள மக்களில் 7 பேரில் ஒருவர் கோடீஸ்வரராக இருப்பதாக தகவல் தெரியவந்துள்ளது. 

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து மிகவும் அழகான நாடுகளில் ஒன்றாக உள்ளது.

உலகளாவிய நிதி மையமாக இந்நாடு உள்ளதற்கு இங்குள்ள வங்கிகளும் ஒரு காரணம் ஆகும். சுவிஸில் மில்லியனர்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். 

இந்த நிலையில், தொழில்முனைவோர் தர்ஷன் என்பவர் சுவிஸைப் பற்றி சில சுவாரஸ்யமான உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளார். 

அவர் கூறியதில் குறிப்பான விடயம் என்னவென்றால் சுவிட்சர்லாந்தில் 7 பெரியவர்களில் ஒருவர் கோடீஸ்வரராம். இது அமெரிக்காவை விட 5 மடங்கு அதிகம். 

அதேபோல் சுவிஸில் 41 சதவீதம் பேர் மட்டுமே வீடுகளை வைத்துள்ளார்களாம். இதற்கு காரணம், பல சுவிஸில் மில்லியனர்கள் வாடகைக்கு விட விரும்புகின்றனர் மற்றும் வீடுகளை வாங்காமல் சேமிக்கும் பணத்தை அதிக லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்வதாக அவர் கூறுகிறார்.

ஒழுக்கமான சேமிப்பு முறையை சுவிஸ் குடும்பங்கள் பின்பற்றுவதால், தங்கள் வருமானத்தில் 20 முதல் 30 சதவீதம் செலவழிக்கும் முன்னே சேமிக்கிறார்கள். 

மேலும் சுவிஸ் மக்கள் தங்கள் ஆண்டு வருமானத்தில் 5 முதல் 10 சதவீதத்தை தனிப்பட்ட வளர்ச்சியில் முதலீடு செய்கிறார்கள். அவர்களின் முதலீடுகளில் மொழிகள், தொழில்நுட்பம் மற்றும் நிதி கல்வியறிவு ஆகியவை மதிப்புமிக்கதாக காணப்படுகின்றன.

சுவிஸ் மில்லியனர்கள் தங்களது பணத்தை பல வங்கி கணக்குகளை பயன்படுத்தி நிர்வகிக்கிறார்கள். அவர்களில் பலர் தினசரி பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் வங்கிகளை பயன்படுத்துகின்றனர்.

தனிப்பயனாக்கப்பட்ட செல்வ மேலாண்மைக்கு தனியார் வங்கிகளையும், அந்நிய செலாவணி மற்றும் உலகளாவிய முதலீடுகளுக்காக சர்வதேச வங்கிகளையும் பயன்படுத்துகின்றனர் என அவர் பதிவிட்டுள்ளார்.    
 

Leave a Reply