• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்காவில் வேலை இழந்த பெண்ணுக்கு லொத்தர் சீட்டில் கிடைத்த அதிர்ஷ்டம்

கனடா

அமெரிக்காவில் பெண் ஒருவருக்கு வேலை இழந்த இரண்டே நாட்களில் லொட்டரியில் சுமார் ரூ. 9 கோடி பரிசு விழுந்துள்ளது.

ஐடி (IT) துறை உட்பட அனைத்து தனியார் நிறுவனங்களிலும் பணியாளர்கள் ஆட்குறைப்பு செயல்முறைகள் சமீபகாலமாக அதிகமாக நடைபெற்று வருகிறது.

அவ்வாறு வேலையிழந்த பெண் ஒருவர், சில நாட்களுக்கு முன், தன் வீட்டிற்கு மளிகைப் பொருட்கள் வாங்கும் போது, Gold Rush scratch-off ​​லொட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

வேலை இழந்த வேதனையில் இருந்த அவருக்கு, அடுத்த இரண்டு நாட்களில் இந்த லொட்டரியில் 3,00,000 டொலர் ஜாக்போட் அடித்துள்ளது.

இது இலங்கை பணமதிப்பில் சுமார் ரூ.9 கோடி ஆகும். இச்சம்பவம் அமெரிக்காவின் சவுத் கரோலினாவில் பதிவாகியுள்ளது.

இந்தப் பணத்தில் சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ள அப்பெண், வேலையை இழந்துவிட்டதால், சொந்தமாக சிறு தொழில் தொடங்கவும் முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply