• Welcome to TamilsGuide
செய்திகள் 1

GOAT திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்குமா ? வெளியான அதிர்ச்சி தகவல்

சினிமா

நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகி வரும் படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (தி கோட்). ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல், மீனாட்சி சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று பின்னணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான ஸ்பார்க் பாடல் நேற்று வெளியானது.

பாடலில் விஜய் மற்றும் மீனாட்சி சவுத்ரி இணைந்து நடனமாடியுள்ளனர். இதில் விஜய் மிகவும் இளம் தோற்றத்தில் ஸ்டைலிஷாகவுள்ளார். பாடலில் விஜயின் தோற்றத்தை டி ஏஜிங் தொழில் நுட்பத்தை உபயோகித்து இளம் தோற்றத்தில் காட்சி படுத்தியுள்ளனர்.

பாடல் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டிரைலர் வரும் ஆக்ஸ்ட் 3 வது வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் திரைப்படம் என்றாலே அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவும் அந்த விழாவில் விஜய் பேசும் பேச்சும், குட்டி ஸ்டோரி மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பும் வரவேற்பும் உண்டு.

அதேப்போல கோட் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இசை வெளியீட்டு விழா சிங்கப்பூர் அல்லது மலேசியாவில் நடக்கும் என தகவல் சில நாட்களுக்கு முன் வெளியானது.

ஆனால் தற்பொழுது வந்த தகவலில் அடிப்படையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்கும் வாய்ப்பு மிக குறைவு என கூறப்படுகிறது. படத்தின் முதல் பாடலான விசில் போடு மற்றும் நேற்று வெளியான ஸ்பார்க் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு கிடைக்காதலால் படக்குழு வருத்தமடைந்து இசை வெளியீட்டு விழாவை பெரியளவுக்கு நடத்த விருப்பமில்லை எனவும் கூறப்படுகிறது.

வெங்கட் பிரபுவின் தங்கையான பவதாரணி சமீபத்தில் காலமானார். இதனாலும் விழா வைக்க வேண்டாம் என நினைக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இசை வெளியீட்டு விழா வைப்பதும் வைக்காததும் முழுக்க முழுக்க நடிகர் விஜயின் முடிவு என சமீபத்தில் நடந்த நேர் காணலில் இயக்குனர் வெங்கட் பிரபு கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் ஏமாற்றத்துடனும் வருத்தத்துடன் இருக்கின்றனர்.
 

Leave a Reply